ADDED : மார் 22, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் பாலதண்டாயுதபாணி கோவிலில், 32ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா, வரும் 25ம் தேதி நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில், மாலை, 4:00 மணிக்கு, சுவாமிக்கு அபிஷேக பூஜை நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு, சுவாமி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.

