/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பன்மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
/
பன்மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : மே 20, 2024 11:00 PM

மேட்டுப்பாளையம்:காரமடை கூரனூரில் பன்மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் காரமடை அருகே கூரனூர் கிராமத்தில் பன்மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று முன் தினம் நடைபெற்றது.
முன்னதாக 17ம் தேதி காலை 8.30 மணிக்கு, மங்கள இசையுடன் மகா கணபதி ஹோமமும், தொடர்ந்து காலை 11 மணிக்கு சுள்ளிபாளையம் விநாயகர் கோவிலில் இருந்து கோபுர கலசம், முளைப்பாரி, மற்றும் தீர்த்த குடம் எடுத்து வருதல் நடைபெற்றது.
பின் மாலை மங்கள இசையுடன் விநாயகர் பூஜை, முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 18ம் தேதி திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது.
இதையடுத்து நேற்று முன்தினம், காலை 5:30 மணிக்கு நான்காம் கால பூஜையுடன், யாகசாலையிலிருந்து மூலவர் திருமேனிக்கு அருள்சக்தியை நிறைவு செய்து, கலசங்கள் கோவிலில் வலம் வந்து, சிவஸ்ரீ ஞா.அஸ்வின் சிவாச்சாரியார் முன்னிலையில் கோபுர கலசத்திற்கு புனித நீருற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து சக்தி விநாயகர் மற்றும் பன்மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையும், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

