/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பதக்கங்களை அள்ளிய பண்ணாரி அம்மன்
/
பதக்கங்களை அள்ளிய பண்ணாரி அம்மன்
ADDED : மே 26, 2024 12:21 AM
கோவை : தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், துறைத்திறன் கவுன்சிலுடன் இணைந்து, 'இந்தியா ஸ்கில்ஸ்' என்ற, தேசிய அளவிலான திறன் போட்டியை நடத்தியது.
மண்டலம், மாநில அளவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் தேசியளவிலான போட்டிக்கும் இதில் வெற்றி பெறும், இந்தியா ஸ்கில்ஸ் வெற்றியாளர்கள் இந்தியா சார்பில், சர்வதேச போட்டிகளில் பங்கேற்பார்கள்.
கடந்த 14ம் தேதி முதல் டெல்லி, பெங்களூருவில், கட்டுமான தொழில்நுட்பங்கள், போக்குவரத்து, உற்பத்தி மற்றும் பொறியியல், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட ஆறு துறைகளின் கீழ், 61 திறன் அடிப்படையில் இப்போட்டி நடத்தப்பட்டது.
இதில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியை சேர்ந்த 31 மாணவர்கள், 12 திறன்களில் தேர்ச்சி பெற்று, இறுதி போட்டியில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
போட்டியில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், ஒன்பது திறன் பிரிவுகளில் 15 விருதுகளை வென்று அசத்தியுள்ளனர்.
தமிழகளவில், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள், மூன்று தங்கம், நான்கு வெள்ளி, இரண்டு வெண்கல பதக்கங்கள் மற்றும் ஆறு 'மெடாலியன் ஆப் எக்சலன்ஸ்' விருதுகளை வென்றனர்.