/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரண் மேல் ஆடு வளர்ப்பு: வேளாண் மாணவியர் பயிற்சி
/
பரண் மேல் ஆடு வளர்ப்பு: வேளாண் மாணவியர் பயிற்சி
ADDED : மே 02, 2024 11:17 PM
ஆனைமலை:கோவை வேளாண் பல்கலை, 11 மாணவியர் தப்பட்டைகிழவன்புதுாரில், பரண் மேல் ஆடு வளர்ப்பது குறித்து கள அனுபவம் பெற்றனர். பருவமழை பொய்த்து வெப்ப அலைகள் வீசும் நிலையில், ஆடு வளர்ப்பு விவசாயிகளுக்கு கை கொடுப்பதாக விவசாயி மகாலிங்கம் தெரிவித்தார்.
விவசாயி, மாணவியருக்கு அளித்த விளக்கம் வருமாறு:
தரையில் இருந்து, 3 மீட்டர் உயரத்தில் பரண் அமைந்துள்ளதால், மழை பெய்தாலும், ஆடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வேச்சேரி, தலைச்சேரி ஆடுகள் இம்முறையில் வளர்க்கப்படுகின்றன.
மூன்று மாத ஆட்டுக்குட்டிகள் வளர்த்து, விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, சோளமாவு, மரவள்ளிக்கிழங்கு மாவு, கோதுமை மாவு, துவரை, பாசிப்பயறு கலந்த குருணை, சோயா, பருத்திக்கொட்டை போன்ற அடர் தீவனங்களாக ஆடுகளுக்கு கொடுக்கப்படுகிறது.
சர்க்கரைப்பழ மரம், பூவரசு மரம் மற்றும் புல் வகைகளை பசுந்தீவனமாக பயன்படுத்தலாம். மூன்று மாத ஆட்டுக்குட்டியின் எடை, 14 கிலோவாகும். இவை ஆறு மாதத்தில், 25 கிலோவாக எடை கூடுகின்றன. ஒரு கிலோ உயிர் எடை, 400 ரூபாய் என்ற வீதம் விற்பனை செய்யப்படுகிறது.
ஆட்டு எருவில் தழை, மணி, சாம்பல் சத்துகள் இருப்பதால் சிறந்த எருவாக பயிர்களுக்கு உபயோகமாகிறது. ஒரு கிலோ எரு, ஆறு ரூபாய்க்கு விற்பனையாகிறது என விளக்கமளித்தார்.