/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
/
பெற்றோர், ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : மார் 28, 2024 10:38 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், பெற்றோர் ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மூன்றாமாண்டு மாணவ, மாணவியரின் பெற்றோர் கலந்து கொண்டனர். முன்னதாக, கல்லுாரி துணை முதல்வர் பாரதி, அனைவரையும் வரவேற்றார்.
கல்லுாரிச் செயலாளர் விஜயமோகன் தலைமை வகித்து பேசுகையில், ''பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிப் படிப்பின் போது கல்வி சார்ந்த நலனில் காட்டும் அக்கறை, உயர்கல்வி பயிலும் போது இருப்பதில்லை.
கல்லுாரிகளில் குழந்தைகளின் கல்வித்தரம், அறநெறி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பதுடன் ஆசிரியர்களுடன் தொடர்பில் இருத்தல் வேண்டும்,'' என்றார்.
முடிவில், ஒருங்கிணைப்பாளர் மலர்விழி நன்றி கூறினார். வணிகவியல் இயக்குனர் சித்திக், கணிப்பொறி அறிவியல் இயக்குநர் அப்துல்ரஷீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

