/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆட்டிசம்' என்பது மூளை செயல்பாடு குறைவு மட்டுமே: பெற்றோருக்கு விழிப்புணர்வு
/
'ஆட்டிசம்' என்பது மூளை செயல்பாடு குறைவு மட்டுமே: பெற்றோருக்கு விழிப்புணர்வு
'ஆட்டிசம்' என்பது மூளை செயல்பாடு குறைவு மட்டுமே: பெற்றோருக்கு விழிப்புணர்வு
'ஆட்டிசம்' என்பது மூளை செயல்பாடு குறைவு மட்டுமே: பெற்றோருக்கு விழிப்புணர்வு
ADDED : ஏப் 02, 2024 12:31 AM
கோவை;ஆட்டிசம், மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர் சங்கம்(சாரதி பாமேக்) சார்பில், உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, பெற்றோருக்கு விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்வு, வடகோவை குஜராத்தி சமாஜ் அரங்கில், நேற்று நடந்தது.
இதில், தெரபிஸ்ட் தீபா மாலினி கூறியதாவது:
ஆட்டிசம் என்பது, இடது மற்றும் வலது மூளைக்கு இடையில் உள்ள, ஓர் சென்சார் செயல்பாடு குறைவுதான் தவிர; நோய் அல்ல.
இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு, சாதாரண மனிதர்களை போன்று அனைத்து திறன்களும் இருக்கும். ஆனால் மூளை சிந்திப்பதை, வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில்தான் சிரமங்கள் இருக்கும்.
இப்பாதிப்பு இருக்கும் குழந்தைகளை, ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது, அவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும்.
ஒரு இடத்தையே பார்ப்பது, கைகளை ஆட்டுவது, பேசுவதையே திருப்பி பேசுவது, புதிய ஆடைகள் மற்றும் பரிசுகள் கொடுக்கும் போது, முகமலர்ச்சி இல்லாத அணுகுமுறை என, ஏதோ ஒரு வித்தியாசத்தை அக்குழந்தைகளிடம் உணர முடியும். இந்த அறிகுறி, அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது.
சாதாரண பள்ளிகளில் இக்குழந்தைகளை விடுவதை தவிர்த்து, அவர்களுக்கான மையத்தில் உரிய பயிற்சிகளை தொடர்ந்து அளிக்க வேண்டும்.மையத்தை நம்பி மட்டுமின்றி, பெற்றோர் உரிய பயிற்சி பெற்று, முழு நேரமும் அவர்களுக்கு பயிற்சியாளர்களாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர்கூறினார்.
சங்கத்தின் நிறுவன செயலர் சங்கர்ராமன், இணை செயலாளர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

