/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாக்கிங்' செல்லும் இடத்தில் 'பார்க்கிங்' ரேஸ்கோர்சில் நடைபயிற்சியாளர்கள் சிரமம்
/
'வாக்கிங்' செல்லும் இடத்தில் 'பார்க்கிங்' ரேஸ்கோர்சில் நடைபயிற்சியாளர்கள் சிரமம்
'வாக்கிங்' செல்லும் இடத்தில் 'பார்க்கிங்' ரேஸ்கோர்சில் நடைபயிற்சியாளர்கள் சிரமம்
'வாக்கிங்' செல்லும் இடத்தில் 'பார்க்கிங்' ரேஸ்கோர்சில் நடைபயிற்சியாளர்கள் சிரமம்
ADDED : ஜூன் 24, 2024 12:53 AM

குழியால் தொடரும் விபத்துகள்
சின்னவேடம்பட்டி, அத்திப்பாளையம் ரோடு, கோதண்டராமர் கோவில் முன்புறம் மெயின் ரோட்டில், பெரிய குழிகளாக உள்ளன. இருசக்கர வாகனத்தில் செல்வோர் குழியில் இடறி விழுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் அதிக விபத்துகள் நடக்கின்றன. உயிரிழப்புகள் நிகழும் முன், குழிகளை சரிசெய்ய வேண்டும்.
- ராஜகோபால், உடையாம்பாளையம்.
விபத்து அபாயம்
மதுக்கரை அடுத்த, எட்டிமடையில் ரவுண்டானா அருகே சாலை திருப்பத்தில் பெரிய குழி உள்ளது. வளைவில் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர். புகார் செய்தால், வெறும் மண் கொண்டு சாலையை மூடுகின்றனர். நிரந்தரமாக தார் கொண்டு குழியை மூட வேண்டும்.
- கார்த்திக், க.க.சாவடி.
நடைபாதையில் கார் பார்க்கிங்
ரேஸ்கோர்ஸ் நடைபாதை பகுதியில், மர நிழலுக்காக சிலர் பைக், கார் போன்ற வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் இந்த வாகனங்களால், நடைப்பயிற்சிக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தங்கவேல், ரேஸ்கோர்ஸ்.
சீரமைக்கப்படாத ரோடு
போத்தனுார் ரோடு, 95வது வார்டு, சத்திரம் வீதியில், பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளன. இதேபோல், குழாய் பதிப்புக்கு தோண்டப்பட்ட சாலையும் சீரமைக்கவில்லை. கடந்த நான்கு மாதங்களாக, குடிநீரும் முறையாக விநியோகிக்கவில்லை.
- சலீம், போத்தனுார்.
கடும் துர்நாற்றம்
மதுக்கரை மெயின் ரோடு, கே.வி.கே.,நகர், அரசு பள்ளியின் பின்புறம் காலியிடத்தில் சிலர் குப்பையை வீசிச்செல்கின்றனர். பலவாரங்களாக தேங்கியுள்ள கழிவு, அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- சொக்கலிங்கம், மதுக்கரை.
விடிந்தாலே விபத்துதான்
வடவள்ளி, ஜெயா நகர், உழவர் சந்தைக்குச் செல்லும் தெருவில் சாலை முழுவதும் பள்ளங்களாக உள்ளது. தார் பெயர்ந்து ஜல்லிக்கற்களாக உள்ளது. வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தினமும்சின்ன சின்னவிபத்து ஏற்படுகிறது. சாலையை சீரமைக்க வேண்டும்.
- வேல்ராஜ், வடவள்ளி.
தெருவிளக்கு பழுது
போத்தனுார், 100வது வார்டு, அண்ணாபுரம், சீனிவாச நகர் மெயின் ரோட்டில், மூன்றுக்கும் மேற்பட்ட கம்பங்களில் தெருவிளக்கு எரியவில்லை. இரவு, 7:00 மணிக்கு மேல் வெளியே செல்ல முடியவில்லை.
- சோனா, அன்னாபுரம்.
சாலையெங்கும் குழிகள்
கே.கே.புதுார், 44வது வார்டு, சர்ச் ரோடு மற்றும் என்.எஸ்.ஆர்., ரோடு சந்திக்கும் பகுதியில், சாலை முழுவதும் பெரிய, பெரிய குழிகள் காணப்படுகின்றன. பெரிய வாகனங்களே தடுமாறி செல்லும் நிலையில், இருசக்கர வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
- ராஜகோபால், கே.கே.புதுார்.
கால்வாய் அடைப்பு
ஒண்டிப்புதுார், தாகூர் நகர், மெயின் வீதியில், சிறுவர் பூங்கா எதிரே, சாக்கடை கால்வாயில் குப்பை அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கால்வாயை சுற்றிலும், புதர் செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. பல மாதங்களாக புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
- ரங்கராஜ், தாகூர் நகர்.
குவியும் குப்பை
ஜி.என்.மில்ஸ், 15வது வார்டு, முத்தம்மாள் லே-அவுட்டில் சாலையோரம் இருந்த தொட்டி அகற்றப்பட்டது. இருப்பினும், இப்பகுதியில் தொடர்ந்து குப்பையை சிலர் வீசிச்செல்கின்றனர். தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றுவதுடன், மீண்டும் இப்பகுதியில் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரஸ்வதி, ஜி.என்.மில்ஸ்.
போக்குவரத்திற்கு இடையூறு
நஞ்சுண்டாபுரம் ரோடு, அல்வேர்னியா பள்ளி எதிரில், கடந்த 20ம் தேதி சாலையில் காய்ந்த மரம் ஒன்று விழுந்தது. மரம் அகற்றப்பட்ட நிலையில் கிளைகள், மரக்கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. விபத்திற்கு வாய்ப்பிருப்பதால் மரக்குவியல்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
- ராஜா, நஞ்சுண்டாபுரம்.
கொசுத்தொல்லை
சிங்காநல்லுார், 58வது வார்டு, நந்தா நகர் அடுத்த எஸ்.என்.ஆர்., நகர் நுழைவு வாயிலில், காய்ந்த மரக்கிளைகள் சாலையோரம் பல வாரங்களாக உள்ளது. இதேபோல், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்த கழிவுகளும் அகற்றப்படாமல் உள்ளது. குடியிருப்பு பகுதியில் துர்நாற்றமும், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
- கதிரவன், சிங்காநல்லுார்.