/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டை மறித்து வாகனங்கள் நிறுத்தம்; ஓட்டுநர்கள் பாதிப்பு
/
ரோட்டை மறித்து வாகனங்கள் நிறுத்தம்; ஓட்டுநர்கள் பாதிப்பு
ரோட்டை மறித்து வாகனங்கள் நிறுத்தம்; ஓட்டுநர்கள் பாதிப்பு
ரோட்டை மறித்து வாகனங்கள் நிறுத்தம்; ஓட்டுநர்கள் பாதிப்பு
ADDED : மே 29, 2024 11:50 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி -ஆழியார் வழித்தடத்தில், ஓம்பிரகாஷ் அருகே டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் எடுத்து வரும் லாரி, ரோட்டை மறித்து நிறுத்தப்படுவதால் பிற வாகன ஓட்டுநர்கள் பாதிக்கின்றனர்.
பொள்ளாச்சி -ஆழியார் வழித்தடத்தில், ஓம்பிரகாஷ் அருகே டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு வருவோர், ரோட்டை ஒட்டியே இருசக்கர வாகனங்களை நிறுத்தி, மதுபாட்டில் வாங்க முற்படுகின்றனர்.
தவிர, ஜோதிநகருக்கு செல்லும் சந்திப்பு சாலையும் உள்ளதால், பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து அதிகரிக்கிறது.
இவ்வாறு, இருக்கையில், டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் எடுத்து வரும் லாரி, ரோட்டின் குறுக்கே நிறுத்தப்படுகிறது. நேற்று மதியம், ரோட்டின் குறுக்கே நிறுத்தப்பட்ட லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.