/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ரயில்வே ஸ்டேஷனில் வாகன பார்க்கிங் ஊழியர் அராஜகம்
/
கோவை ரயில்வே ஸ்டேஷனில் வாகன பார்க்கிங் ஊழியர் அராஜகம்
கோவை ரயில்வே ஸ்டேஷனில் வாகன பார்க்கிங் ஊழியர் அராஜகம்
கோவை ரயில்வே ஸ்டேஷனில் வாகன பார்க்கிங் ஊழியர் அராஜகம்
ADDED : ஏப் 09, 2024 12:43 AM
போத்தனூர்;கோவை ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், இரு சக்கர வாகனம் நிறுத்தச் செல்லும் பொதுமக்களிடம், அங்குள்ள ஊழியர் அராஜகமாக நடந்து கொள்வதாக ரயில்வே ஸ்டேஷன் மேலாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில்வே ஸ்டேஷனின் முன்புறம், தெற்கு பகுதியில் இரு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் பகுதி உள்ளது. இங்கு கட்டணம் செலுத்தி, வாகனங்கள் நிறுத்த வேண்டும்.
இதற்கு முன் உள்ள காலி இடத்தில், இரு நாட்களுக்கு முன் மாலையில் ராமநாதபுரம், பசும்பொன் நகரை சேர்ந்த சிவலிங்கம் தனது வாகனத்தை நிறுத்தினார். அவரிடம் வாகன கட்டணம் வசூலிக்கும் ஊழியர், கட்டணம் கேட்டுள்ளார். சிவலிங்கம் கொடுக்க மறுத்துள்ளார்.
இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, சிவலிங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்குள் செல்ல முயன்றார். இதனைக் கண்ட ஊழியர், அவரது வாகனத்தை தரதரவென இழுத்து, வேறிடத்தில் நிறுத்தினார்.
அதிர்ச்சியடைந்த சிவலிங்கம், ஊழியரின் செயல் குறித்து கேட்டபோது, பா.ஜ.,மாவட்ட செயலாளர் வேலுசாமி டெண்டர் எடுத்துள்ளார். முடிந்ததை பார்த்துக்கொள், என மிரட்டியுள்ளார்.
சிவலிங்கம், ஸ்டேஷன் மேலாளரிடம் புகார் மனு கொடுத்தார். அதற்கு அவர், இதுபோன்று ஏற்கனவே நடந்த சம்பவத்தால், கடந்த வாரம் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
'தேர்தல் முடிந்தவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்ய, நடவடிக்கை எடுப்பதாக' கூறியுள்ளார்.
இச்சம்பவம், அவ்விடத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

