/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
43 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க திட்டம் கருத்து சொல்ல கட்சிகளுக்கு அழைப்பு
/
43 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க திட்டம் கருத்து சொல்ல கட்சிகளுக்கு அழைப்பு
43 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க திட்டம் கருத்து சொல்ல கட்சிகளுக்கு அழைப்பு
43 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க திட்டம் கருத்து சொல்ல கட்சிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 31, 2024 01:36 AM

கோவை:ஓட்டுச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
கோவை மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி, 20ம் தேதி துவங்கியது; அக்., 20 வரை நடைபெறும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு பணி மேற்கொள்வர்.
அக்., 29ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தவறு இருந்தால், அக்., 29 முதல் நவ., 28 வரை விண்ணப்பம் கொடுத்தோ அல்லது இணைய வழியிலோ விண்ணப்பித்து தீர்வு காணலாம். 2025 ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இதற்கு முந்தைய நடவடிக்கையாக, கோவை மாவட்டத்தில் நகரப்பகுதியில் 2085, புறநகரில் 992 என, மொத்தம், 3,077 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள, 43 ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்க உத்தேசிக்கப்பட்டு, வரைவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், வாக்காளர் பட்டியலில் சில பகுதிகளை பிரித்தல், சில பகுதிகளை ஒன்றிணைத்தல், கட்டடங்களை மாற்றுதல், பணிகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக கோரிக்கை மற்றும் கருத்துகளை, செப்., 6க்குள் சம்பந்தப்பட்ட சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.
கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகளில், 1,500 வாக்காளர்கள் இருப்பதாக அறிந்தால், அதே வளாகத்தில் ஓட்டுச்சாவடி அமைக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருத்துரை வழங்கலாம். இன்றைய நாள் (ஆக., 30) நிலவரப்படி, மாவட்ட அளவில், 15 லட்சத்து, 39 ஆயிரத்து, 789 ஆண் வாக்காளர்கள், 16 லட்சத்து, 2 ஆயிரத்து, 278 பெண் வாக்காளர்கள், 646 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 31 லட்சத்து, 42 ஆயிரத்து, 713 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
கூட்டத்தில், தி.மு.க., சார்பில் தமிழ்மறை, அன்புசெழியன், சுரேஷ், அ.தி.மு.க., சார்பில் ராஜேந்திரன், சோமு, தே.மு.தி.க., சார்பில் சந்துரு, காங்கிரஸ் சார்பில் காந்த்குமார், வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.