/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மா.கம்யூ., பொது செயலாளருக்கு கோவையில் கட்சியினர் இரங்கல்
/
மா.கம்யூ., பொது செயலாளருக்கு கோவையில் கட்சியினர் இரங்கல்
மா.கம்யூ., பொது செயலாளருக்கு கோவையில் கட்சியினர் இரங்கல்
மா.கம்யூ., பொது செயலாளருக்கு கோவையில் கட்சியினர் இரங்கல்
ADDED : செப் 13, 2024 11:46 PM

கோவை : மா.கம்யூ., பொது செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு, கோவையில் பல்வேறு கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.
மா. கம்யூ., பொது செயலாளராக இருந்த, சீதாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம், டில்லியில் காலமானார். பல்வேறு கட்சியினர், கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட மா.கம்யூ., சார்பில், காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. கட்சியினர், கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். வி.கே.கே. ரோட்டில் புகழஞ்சலி கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன், தி.மு.க., -காங்.,- ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதே போல், இ.கம்யூ., சார்பிலும் சீதாராம் யெச்சூரிக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது.