/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.14 லட்சத்துடன் பயணித்தவர் கைது
/
ரூ.14 லட்சத்துடன் பயணித்தவர் கைது
ADDED : ஏப் 23, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : ஆவணங்களின்றி ரூ.14 லட்சத்துடன் பஸ்சில் பயணித்தவரை, கேரள போலீசார் கைது செய்தனர்.
கேரளா -- தமிழ்நாடு எல்லையான வாளையார் பகுதியில், கேரள போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர். கோவையிலிருந்து திருச்சூருக்கு சென்று கொண்டிருந்த, பஸ்சில் பயணியரை சோதனையிட்டனர்.
வாலிபர் ஒருவரை சோதனை செய்தபோது, ஆடையில் ரகசிய பாக்கெட்கள் வைக்கப்பட்டு, ரூபாய் நோட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
விசாரணையில், எர்ணாகுளம் அருகே ஜெராகி பகுதியை சேர்ந்த வினோஎன்பதும், முறையான ஆவணங்களின்றி,14.2 லட்சம் ரூபாய் ரொக்கம் வைத்திருப்பதும் தெரிய வந்தது. ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார், வினோ மீது வழக்கு பதிவு செய்தனர்.

