/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பு ரயிலை நீடிக்கணும்; பயணியர் வலியுறுத்தல்
/
சிறப்பு ரயிலை நீடிக்கணும்; பயணியர் வலியுறுத்தல்
ADDED : பிப் 15, 2025 06:47 AM
கிணத்துக்கடவு; தைப்பூச நிகழ்வையொட்டி, ரயில்வே நிர்வாகம் சார்பில் கோவை முதல் திண்டுக்கல் மற்றும் திண்டுக்கல் முதல் கோவை வரை கடந்த 8ம் தேதி முதல் 14ம் தேதி (நேற்று) வரை கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
கோவையில் காலை, 9:35 மணிக்கு கிளம்பி மதியம், 2:00 மணிக்கு திண்டுக்கல் வந்தடையும். இதே போன்று திண்டுக்கல்லில் மதியம், 1:10 மணிக்கு கிளம்பி கோவைக்கு மாலை, 5:50 மணிக்கு சென்றடையும்.
இதனால் பயணிகள் பலர் பயனடைந்தனர். நேற்றுடன் இந்த சிறப்பு ரயில் சேவை முடிவடைந்ததால் பெருமளவு பயணியர் அவதி அடையும் நிலை உள்ளது.
தைப்பூசம் நிறைவடைந்தாலும், பழநிக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம், அதிகரித்தபடியே உள்ளது. எனவே, பயணியர் மற்றும் பக்தர்கள் நலன் கருதி, இந்த ரயில் சேவையை கூடுதலாக ஒரு வாரம் நீட்டிப்பு செய்ய வேண்டுமென ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
இந்த ரயில் சேவையை நீட்டிப்பு செய்யும் பட்சத்தில், கோவிலுக்கு செல்லும் வயதான பக்தர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பலர் பயனடைவர்.

