/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரூட் பெர்மிட்' நேரங்களில் ஓடாத பஸ்களால் பயணிகள் தவிப்பு! வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வேடிக்கை
/
'ரூட் பெர்மிட்' நேரங்களில் ஓடாத பஸ்களால் பயணிகள் தவிப்பு! வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வேடிக்கை
'ரூட் பெர்மிட்' நேரங்களில் ஓடாத பஸ்களால் பயணிகள் தவிப்பு! வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வேடிக்கை
'ரூட் பெர்மிட்' நேரங்களில் ஓடாத பஸ்களால் பயணிகள் தவிப்பு! வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வேடிக்கை
ADDED : ஜூன் 14, 2024 12:19 AM
கோவை : கோவையில் இருந்து திருப்பூர் நோக்கிச் செல்லும் பஸ்களை, 'பீக் ஹவர்ஸ்' இல்லாத நேரங்களில் இயக்காமல் நிறுத்தி வைப்பதால், வழித்தடங்களில் உள்ள பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
கோவையில் இருந்த திருப்பூருக்கு அவிநாசி வழியாகவும், பல்லடம் வழியாகவும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்டில் இவ்விரு வழித்தடங்களுக்கும் பஸ்கள் புறப்பட்டுச் செல்லும். பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க, 'டைம் கீப்பர்' அலுவலகம் பஸ் ஸ்டாண்டில் செயல்படுகிறது.
ஒவ்வொரு பஸ்சுக்கும் போக்குவரத்து துறை மூலமாக 'ரூட் பெர்மிட்' வழங்கப்பட்டிருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ள நேரப்படி, அவ்வழித்தடத்தில் பஸ்களை இயக்க வேண்டும். சமீபகாலமாக, டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, 'பீக் ஹவர்ஸ்' இல்லாத சமயங்களில் பஸ்களின் இயக்கத்தை தனியார் பேருந்து நிறுவனத்தினர் தவிர்த்து வருகின்றனர்.
அதாவது, அதிகாலையில் இருந்து காலை, 11:00 மணி வரை அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்பின், பிற்பகல், 4:00 மணி வரை, 'ரூட் பெர்மிட்' இருந்தாலும், பஸ் சேவையை தவிர்த்து வருகின்றனர்.
இதேபோல், இரவு, 10:00 மணிக்கு மேல் இயக்க வேண்டிய அரசு பஸ்களையும் சில சமயங்களில் போக்குவரத்து கழகத்தினர் நிறுத்தி விடுகின்றனர். இதன் காரணமாக, கோவையில் இருந்து அவிநாசி வழியாக திருப்பூர் செல்லும் வழித்தடங்கள் மற்றும் பல்லடம் வழியாக திருப்பூர் செல்லும் வழித்தடங்களில் பஸ் வருகைக்காக காத்திருக்கும் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு நேரம் காத்திருந்து, ஈரோடு அல்லது சேலம் செல்லும் பஸ்களில் பெருமாநல்லுார் வரை சென்று, அங்கிருந்து திருப்பூருக்கு இன்னொரு பஸ்சில் பயணிக்கின்றனர்.
இதேபோல், கோவை நகர்ப்பகுதியில் இயங்கும் டவுன் பஸ்களில், 'பெர்மிட்'டில் கூறப்பட்டுள்ள வழித்தடத்துக்கு முழுமையாக இயக்குவதில்லை. காந்திபுரத்தில் இருந்து புறப்படும் தனியார் டவுன் பஸ்கள், அதிகமான பயணிகள் ஏறுமிடம் வரையே இயக்குகின்றனர். அதன்பின், மீண்டும் திரும்பி விடுகின்றனர். உதாரணத்துக்கு உக்கடத்தோடு நிறுத்திக் கொள்கின்றனர் அல்லது போத்தனுார் வரை செல்கின்றனர். அதை கடந்து கிராமப்புறங்களுக்குச் செல்வதில்லை. இதன் காரணமாக, கிராமப்புற மக்கள் பஸ் சேவையின்றி தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
'ரூட் பெர்மிட்' நேரங்களில் பஸ்கள் இயக்கப்படாதது குறித்து, கள ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளின் கடமை. இத்துறையினர் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர்.