/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜனவரி மாத மின் கட்டணத்தை செலுத்தலாம்
/
ஜனவரி மாத மின் கட்டணத்தை செலுத்தலாம்
UPDATED : மார் 22, 2024 12:16 PM
ADDED : மார் 22, 2024 12:16 AM
கோவை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், குனியமுத்துார், பி.கே.புதுார் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர், ஜனவரி மாத மின் கட்டணத்தையே மார்ச் மாத கட்டணமாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குனியமுத்துார் செயற்பொறியாளர் சுரேஷ் அறிக்கை:
குனியமுத்துார், பி.கே.புதுார் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட, மதுரைவீரன் கோவில் வீதி, பாலு கார்டன், பழனியப்பா கவுண்டர் வீதி, இ.பி., காலனி, ராமானுஜம் நகர் மற்றும் வசந்தம் நகரில், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட பகுதி மின் நுகர்வோர், ஜனவரி மாத மின் கட்டணத்தையே மார்ச் மாதத்துக்கும் செலுத்தலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

