/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டில் இருந்தபடியே வரி செலுத்துங்க! விழிப்புணர்வு ஏற்படுத்தும் நகராட்சி
/
வீட்டில் இருந்தபடியே வரி செலுத்துங்க! விழிப்புணர்வு ஏற்படுத்தும் நகராட்சி
வீட்டில் இருந்தபடியே வரி செலுத்துங்க! விழிப்புணர்வு ஏற்படுத்தும் நகராட்சி
வீட்டில் இருந்தபடியே வரி செலுத்துங்க! விழிப்புணர்வு ஏற்படுத்தும் நகராட்சி
ADDED : மார் 13, 2025 11:11 PM

பொள்ளாச்சி: 'வீட்டில் இருந்தபடியே வரியை, 'ஆன்லைன்' வாயிலாக செலுத்தி வீண் அலைச்சலை தவிர்க்கலாம்,' என, நகராட்சி கமிஷனர் கணேசன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சியில், 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குப்பை சேவை கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்டவை தற்போது வசூலிக்கப்படுகிறது.
குழுக்கள் அமைத்து, 100 சதவீத வரி வசூல் இலக்கை எட்டும் வகையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வீண் அலைச்சலை தவிர்க்க, 'ஆன்லைன்' வாயிலாக, வரியை செலுத்தலாம் என, நகராட்சி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, பொதுமக்கள் கூடும் இடங்களில், விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நகராட்சி கமிஷனர் கணேசன் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சியில், வரி செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மொத்தம், 32 கோடியே, 96 லட்சம் ரூபாயில், 90 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள, 10 சதவீதம் வரி வசூல் தீவிரம் காட்டப்படுகிறது.
அதில், வீட்டில் இருந்து நகராட்சிக்கு வராமல் வரி செலுத்துவது எப்படி என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.'ஜி பே' தேடும் பகுதியில், 'Tamilnadu urban esevai municipal tax' என டைப் செய்யவும். 'லிங்க் அக்கவுன்ட்' தேர்வு செய்யவும்.
'Property Tax' நியூ அல்லது ஓல்டு தேர்வு செய்து சொத்து வரி எண், 'டைப்' செய்யவும். ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்து வரி இருந்தால், அடையாளத்துக்காக, 'நிக் நேம்' தரவும். அதன்பின், உங்கள் வங்கி கணக்குடன் சொத்து வரி இணைக்கப்பட்டுவிடும்.
பொதுமக்கள் வீண் அலைச்சலை தவிர்த்து, வரி செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினார்.