/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்றாண்டுகளாக முடங்கிய திட்டங்கள் :தேர்தல் பிரசாரத்தில் கேள்வி கேட்க மக்கள் ஆர்வம்
/
மூன்றாண்டுகளாக முடங்கிய திட்டங்கள் :தேர்தல் பிரசாரத்தில் கேள்வி கேட்க மக்கள் ஆர்வம்
மூன்றாண்டுகளாக முடங்கிய திட்டங்கள் :தேர்தல் பிரசாரத்தில் கேள்வி கேட்க மக்கள் ஆர்வம்
மூன்றாண்டுகளாக முடங்கிய திட்டங்கள் :தேர்தல் பிரசாரத்தில் கேள்வி கேட்க மக்கள் ஆர்வம்
ADDED : மார் 24, 2024 11:49 PM
அன்னுார்:நீலகிரி எம்.பி., தேர்தலில், அவிநாசி தொகுதியில், மூன்று ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் அத்திக்கடவு திட்டமும், துவக்கப்படாத சிப்காட் தொழில்பேட்டை திட்டமும் பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
பிரசாரத்துக்கு வருவோரிடம் முடங்கி கிடக்கும் அத்திக்கடவு திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து கேட்க உள்ளதாக அன்னுார் மக்கள் தெரிவித்தனர்.
அன்னுார் வட்டார பொதுமக்கள் கூறியதாவது :
கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கனவான அத்திக்கடவு திட்டம் செயல்பாட்டுக்கு வராமலே உள்ளது. மேலும் இந்தத் திட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 1,400 குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன.
இந்தக் குளம், குட்டைகளுக்கான அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தில் விரிவான திட்ட அறிக்கை 2020ல் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த திட்டமும் இதுவரை துவக்கப்படவில்லை. இதனால் குளம், குட்டைகள் நீரில்லாமல் விளையாட்டு மைதானங்களாக காட்சியளிக்கின்றன.
அன்னுாரின் வடக்கு பகுதியில் மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் அமைப்பதற்காக பசூர் உள்ளிட்ட சில ஊராட்சிகள் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதையடுத்து அரசு 3,500 ஏக்கர் பரப்பளவில் குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர் ஊராட்சிகளில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்கப்படும் என அறிவித்தது.
விவசாயிகள் எதிர்ப்பால் நீலகிரி எம்.பி., ராஜா, கோவை கலெக்டர், சிப்காட் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள், 'விவசாயிகளிடமிருந்து கட்டாயப்படுத்தி நிலம் பெறப்பட மாட்டாது. கம்பெனிக்கு சொந்தமான நிலத்தில் மட்டும் தொழில் பேட்டை அமைக்கப்படும். யாரிடமும் வற்புறுத்தி வாங்கப்பட மாட்டாது. கம்பெனி நிலத்தில் தொழில் பேட்டை அமைக்கப்படும் என அறிவித்தனர். ஆனால் எம்.பி., ராஜா அறிவித்து ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தொழில்பேட்டை அமைப்பதற்கான நடவடிக்கையும் இல்லை.
எனவே, பிரசாரத்திற்கு வரும் நீலகிரி எம்.பி., ராஜா மற்றும் அனைத்து கட்சியினரிடமும் மூன்று ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் அத்திக்கடவு முதல் திட்டம், இரண்டாம் திட்டம், மற்றும் சிப்காட் தொழில்பேட்டை குறித்து கேட்க உள்ளோம்.
இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

