/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கான்கிரீட் சாலை அகலப்படுத்த மக்கள் காத்திருப்பு போராட்டம்
/
கான்கிரீட் சாலை அகலப்படுத்த மக்கள் காத்திருப்பு போராட்டம்
கான்கிரீட் சாலை அகலப்படுத்த மக்கள் காத்திருப்பு போராட்டம்
கான்கிரீட் சாலை அகலப்படுத்த மக்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 09, 2024 04:16 AM

ஆனைமலை : தாத்துார் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சாலையை அகலப்படுத்தக்கோரி, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாத்துார் ஊராட்சி, ராயல் ரெசிடென்சி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 8.58 லட்சம் ரூபாய் மதிப்பில்,153 மீ., நீளத்துக்கு கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலையை அகலமாக அமைக்க வேண்டும், என, முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் மயில்சாமி தலைமையில், பி.டி.ஓ.,விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிகாரிகள் முறையான பதில் அளிக்காததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் பேச்சு நடத்திய பி.டி.ஓ., மோகன்பாபு, 15வது நிதிக்குழு மானியத்தில் சாலையை அகலப்படுத்திக் கொடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். காத்திருப்பு போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.