/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தகிக்கும் கோடை வெயிலில் மக்கள் வெளியே வர தயக்கம்
/
தகிக்கும் கோடை வெயிலில் மக்கள் வெளியே வர தயக்கம்
ADDED : ஏப் 29, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவையில் கடந்த சில நாட்களாக, வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. மதிய நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு, வெப்பம் அதிகம் இருப்பதால், பொது வெளியில் நடமாட்டம் குறைந்துள்ளது.
மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் ஆட்டோ, டாக்ஸி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக, வெளியே வருபவர்களும் குடையும் கையுமாக இருக்கின்றனர்.
இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் முகம், தலையை துணிகளால் 'கவர்' செய்து, பயணிக்கின்றனர். இப்படிப்பட்ட வெயிலை இதுவரை பார்த்ததில்லை என்கின்றனர் கோவை மக்கள்.

