ADDED : ஏப் 16, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு - வடசித்தூர் ரோட்டில், சமத்துவபுரம் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு மதியம் முதல் இரவு வரை, 'குடி'மகன்கள் அட்ராசிட்டி அதிகரித்து வருகிறது.
இங்கு மது குடித்து விட்டு, வாகனங்களில் பயணம் மேற்கொள்பவர்களால், மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மதுக்கடையில் இருந்து, ரோட்டை கவனிக்காமல் வேகமாக வருவதால், விபத்து அபாயம் அதிகம் உள்ளது.
இதுமட்டுமின்றி, ரோட்டின் ஓரத்தில் நின்று மது குடித்து, காலி பாட்டிலை வீசி செல்கின்றனர். இவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் மக்கள் நலன் கருதி, மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

