/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்சாரி வீதியில் சாக்கடை அடைப்பு வீட்டுக்குள் நுழைவதால் மக்கள் அவதி
/
அன்சாரி வீதியில் சாக்கடை அடைப்பு வீட்டுக்குள் நுழைவதால் மக்கள் அவதி
அன்சாரி வீதியில் சாக்கடை அடைப்பு வீட்டுக்குள் நுழைவதால் மக்கள் அவதி
அன்சாரி வீதியில் சாக்கடை அடைப்பு வீட்டுக்குள் நுழைவதால் மக்கள் அவதி
ADDED : ஏப் 23, 2024 02:06 AM

கோவை;இரு வார்டுகள் இணையும் பகுதிகளில், ஏற்பட்டுள்ள சாக்கடை அடைப்பால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், வீடுகளுக்குள் கழிவுநீர் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி, 67வது வார்டு மற்றும் 83வது வார்டுகள் இணையும் இடத்தில் அன்சாரி வீதி, காட்டூர் பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு, குடியிருப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் என, 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.
இந்நிலையில், இரு வார்டுகள் இணையும் பகுதியான அன்சாரி வீதி, ராம் நகர் பகுதிகளில், சாக்கடை அடைப்பு ஏற்படுகிறது.
இதனால், ரோட்டில் கழிவுநீர் தேங்குவதால், சுகாதார சீர்கேடு பிரச்னையுடன், வீடுகளுக்குள் கழிவுநீர் 'ரிவர்ஸ்' எடுக்கும் அவலம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
அன்சாரி வீதியை சேர்ந்த கிருஷ்ணன் கூறியதாவது:
மாநகராட்சி, 67வது வார்டில் ராம் நகர், அன்சாரி வீதி உள்ளிட்டவை அமைந்துள்ளன. விநாயகர் கோவில் முதல் முருகன் தியேட்டர் வரையிலான காட்டூர் பகுதி, 83வது வார்டில் இடம்பெற்றுள்ளன.
இவ்விரு வார்டுகளும் இணையும் அன்சாரி வீதியில் தினமும் காலை, 6:00 முதல் 10:00 மணி வரை சாக்கடை அடைப்பு ஏற்படுவது, நீண்டகால பிரச்னையாக உள்ளது. இரு வார்டுகளில் இருந்தும் கழிவுநீர் இந்த சாக்கடையில் செல்கிறது. குப்பையை மக்கள் பொறுப்பின்றி கொட்டுவதால், அடைப்பு ஏற்பட்டு ரோட்டில் கழிவுநீர் பெருக்கெடுக்கிறது. வீடுகளுக்குள் கழிவுநீர் செல்லும் அவலமும் உள்ளது. கோவில், கடைகள், குடியிருப்புகள் மிகுந்த இப்பகுதியில், சாக்கடை அடைப்பு பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம், நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

