/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையின் மையப்பகுதியில் மண் புழுதி பறப்பதால் மக்கள் அவதி
/
சாலையின் மையப்பகுதியில் மண் புழுதி பறப்பதால் மக்கள் அவதி
சாலையின் மையப்பகுதியில் மண் புழுதி பறப்பதால் மக்கள் அவதி
சாலையின் மையப்பகுதியில் மண் புழுதி பறப்பதால் மக்கள் அவதி
ADDED : பிப் 27, 2025 11:11 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து, பிரதான நகரங்களுக்கு செல்லும் சாலை, அடுத்தடுத்து அகலப்படுத்தப்பட்டு, ரோட்டின் நடுவே மையத்தடுப்புஅமைக்கப்பட்டுளளது.இதனால், நகரைச் கடந்து செல்லும் வழித்தடங்கள் அனைத்தும், நான்கு வழிச்சாலையாக மாறியது.
ஆனால், முறையாக மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழையின்போது, அடித்து வரப்படும் மண், மையத்தடுப்பின் ஓரத்தில் குவிந்து விடுகிறது. தவிர, சமீப காலமாக, பகலில் வீசும் காற்றின் காரணமாக, ரோடு முழுவதும் புழுதி மண் படிந்த நிலையில் காணப்படுகிறது.
கனரக வாகனங்கள் செல்லும் போது, புழுதி பறப்பதால், பின்தொடர்ந்து செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், அதில் பயணிப்பவர்கள் பாதிக்கின்றனர். சில வழித்தடங்களில், இரு சக்கர வாகனங்களில் செல்வோர், மண் தேங்கி இருக்கும் பகுதியில் சறுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். சாலையில் மையத்தடுப்பையொட்டி படிந்து நிற்கும் மண்ணை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முனைப்பு காட்ட வேண்டும்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரின் பிரதான சாலைகளின் நடுவே, மண் பரவி உள்ளதால், நெடுஞ்சாலை பணியாளர்கள், பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். இதேபோல, பாலக்காடு ரோடு, கோட்டூர் ரோட்டில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்திலும், மண் படிந்து காணப்படுகிறது. ஆணி, இரும்பு உள்ளிட்ட கூரான பொருட்களும் சிதறி கிடப்பதால், அவைகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.