/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே பாலத்தில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
/
ரயில்வே பாலத்தில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
ரயில்வே பாலத்தில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
ரயில்வே பாலத்தில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
ADDED : செப் 11, 2024 02:57 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - மீன்கரை ரோட்டில், சீனிவாசபுரத்தில் ரயில்வே மற்றும் மாநில நெடுஞ்சாலத்துறை இணைந்து, 26.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கீழ் மட்ட பாலம் கட்டியது. கடந்த, 2015ம் ஆண்டு நவம்பர் மாதம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்பட்டது.
பொள்ளாச்சி - ஆனைமலை, திருச்சூர், சேத்துமடை, டாப்சிலிப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த பாலம் வழியாக செல்கின்றன. பாலத்தின் ஓடுதளம் அவ்வப்போது பெயர்வதும், சீரமைப்பதும் வாடிக்கையாக இருந்தது. தற்போது, கழிவுநீர் குட்டை போல தேங்குவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: சீனிவாசபுரம் பாலத்தில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாக செல்வோர் சிரமப்படுகின்றனர். வாகனங்கள் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தப்படுவதால், விபத்துக்கு வழிவகுக்கிறது.
இது குறித்து, அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். இவ்வாறு, கூறினர்.

