/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் தோண்டிய குழியால் பொதுமக்கள் கடும் அதிருப்தி
/
ரோட்டில் தோண்டிய குழியால் பொதுமக்கள் கடும் அதிருப்தி
ரோட்டில் தோண்டிய குழியால் பொதுமக்கள் கடும் அதிருப்தி
ரோட்டில் தோண்டிய குழியால் பொதுமக்கள் கடும் அதிருப்தி
ADDED : ஜூலை 24, 2024 01:36 AM

வால்பாறை;வால்பாறை நகரின் மத்தியில் வாழைத்தோட்டம் பகுதி அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் தாலுகா அலுவலகம், பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவை உள்ளன.
வால்பாறையில் பருவமழை தொடர்ந்து பெய்யும் நிலையில், தாலுகா அலுவலகம் செல்லும் ரோடு சீரமைக்கும் பணிக்காக குழி தோண்டியுள்ளனர். இதனால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்கள் செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'ரோடு சீரமைக்கும் பணி, மழை காலத்துக்கு முன்பாக செய்ய வேண்டும். தற்போது கனமழை பெய்யும் நிலையில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பணி நடக்கிறது. மேலும் மழை பெய்யும் போது மேற்கொள்ளும் பணியும் தரமாக இருக்காது,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வாழைத்தோட்டம் பகுதியில் கால்வாய் சீரமைக்கும் பணிக்காக ரோட்டில் குழி தோண்டப்பட்டுள்ளது. மொத்தம், 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணி ஓரிரு நாளில் நிறைவடையும். அது வரை மாற்று வழிப்பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.