/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமும் உதிர்ந்து விழும் கான்கிரீட் காரைகள் உயிர் பயத்துடன் வாழ்வதாக மக்கள் புகார்

ADDED : செப் 03, 2024 01:50 AM
அன்னுார்;'தினமும் உதிர்ந்து விழும் சிமென்ட் காரைகளால் உயிர் பயத்துடன் வாழ்கிறோம்,' என, அல்லிகுளம் மக்கள், எம்.பி., ராஜாவிடம் புகார் தெரிவித்தனர்.
அல்லிகுளத்தில், 16.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி திறப்பு விழா நடந்தது.
இதில் பங்கேற்ற நீலகிரி எம்.பி., ராஜாவிடம், அல்லிகுளம் மக்கள் கூறுகையில், 'எங்கள் ஊரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மேல் தளத்தில் இருந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன.
சுவர்கள் பிளவுபட்டு உள்ளன. ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சுவர் இடிந்து விழுந்து ஒரு மூதாட்டி இறந்தார். 200 வீடுகள் ஓட்டு வீடுகளாக உள்ளன. எங்களுக்கு கான்கிரீட் வீடு கட்டி தர வேண்டும்.
பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். நாங்கள் தினக்கூலி வேலை செய்து வருகிறோம்.
இங்குள்ள அங்கன்வாடி மையத்தில், 30 குழந்தைகள் படிக்கின்றன. கட்டடம் கட்டி 40 வருடம் ஆகிவிட்டது. எந்த நேரத்திலும் விழும் அபாயம் உள்ளது,' என்றனர். சிலர், முதியோர் உதவி தொகைக்கு பலமுறை விண்ணப்பித்தும் உத்தரவு வரவில்லை என புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ராஜா உறுதியளித்தார்.