/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
/
ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
ஆக்கிரமிப்பு கடைகளால் இடையூறு முறைப்படுத்த மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 24, 2024 01:41 AM
வால்பாறை;வால்பாறையில், நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை நகராட்சி அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், சாலையோரமாக உணவு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. மத்திய அரசின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தில், 22 தள்ளுவண்டிகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டன.
வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இந்த தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு, கடை வைத்துள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை நகரில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து, சிலர் கடைகளை வைத்துள்ளனர். ஆளும்கட்சியினர் ஆதரவில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும்.
மேலும், மத்திய அரசால் வழங்கப்பட்ட தள்ளுவண்டிக்கடைகள், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், சமீப காலமாக ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் இதர வியபாரிகள் நடைபாதையை ஆக்கிமித்துள்ளனர்.
இதனால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. வாகனங்கள் வரும் போது, விபத்தும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று இடம் வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.