/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கடைகளில் விலைப்பட்டியல் வைக்க மக்கள் எதிர்பார்ப்பு
/
கடைகளில் விலைப்பட்டியல் வைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கடைகளில் விலைப்பட்டியல் வைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கடைகளில் விலைப்பட்டியல் வைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 04, 2025 10:29 PM
வால்பாறை:
வால்பாறையில் உள்ள கடைகளில், பொருட்களின் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரில், 500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகள் உள்ளன. மளிகை கடை, பேக்கரி, ேஹாட்டல், கறிக்கடை, கோழிக்கடை, மீன்கடை உள்ளிட்ட பல்வேறு வகையான கடைகள் உள்ளன.
ஆனால், எந்த கடைகளிலும் விலைபட்டியல் வைக்கப்படவில்லை. இதனால் மக்கள் விலை தெரியாமலும், பொருட்களை வாங்கிச்செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை மலைப்பகுதிக்கு தேவையான பொருட்கள், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்படுகின்றன. சமவெளிப்பகுதியிலிருந்து வால்பாறைக்கு பொருட்கள் கொண்டு வருவதால், அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள் அதிக அளவில் பொருட்களை வாங்க செல்லும் இடமான மளிகை, காய்கறி, கறிக்கடை, மீன்கடை, பேக்கரி, ேஹாட்டல்களில் விலைப்பட்டியில் வைக்கப்படவில்லை. இதனால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, கடைகளில் விலைப்பட்டியல் வைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.