/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆமை வேகத்தில் வடிகால் கட்டும் பணி; முயலாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு
/
ஆமை வேகத்தில் வடிகால் கட்டும் பணி; முயலாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு
ஆமை வேகத்தில் வடிகால் கட்டும் பணி; முயலாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு
ஆமை வேகத்தில் வடிகால் கட்டும் பணி; முயலாக மாற்ற மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 21, 2024 11:31 PM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வடிகால் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியநாயக்கன்பாளையத்தில் கடந்த நான்கு ஆண்டு காலமாக நடந்த மேம்பால கட்டுமான பணி முடிந்து, சமீபத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது.
மேட்டுப்பாளையம் ரோடு, வண்ணான் கோவில் பிரிவு அருகே சாமிசெட்டிபாளையத்திலிருந்து வரும் சாக்கடை நீர் வடிந்து செல்ல, வடிகால் கட்டும் பணி கடந்த மாதம் துவக்கப்பட்டது.
இதனால் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் மற்றும் அரசு டவுன்பஸ்கள் சாமிசெட்டிபாளையம் பிரிவிலிருந்து சாரங்க நகர் வழியாக ஜோதிபுரத்தை வந்தடைந்து, மேட்டுப்பாளையம் நோக்கி செல்கின்றன. சில புறநகர் பஸ்கள், எல்.எம்.டபிள்யூ., பிரிவிலிருந்து மேம்பாலத்தின் மீது பயணம் செய்து நேரடியாக ஜோதிபுரம் அடைந்து, அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்கிறது.
இதனால் கோவையில் இருந்து பெரியநாயக்கன்பாளையம், எல்.எம்.டபிள்யூ., பிரிவு வரும் பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' மேட்டுப்பாளையம் ரோடு, வண்ணான் கோவில் பிரிவு அருகே வடிகால் கட்டும் பணி ஆமை வேகத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.
பணியை வேகப்படுத்தி, உடனடியாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

