/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனை தரம் உயர்த்த அன்னுார் மக்கள் எதிர்பார்ப்பு
/
அரசு மருத்துவமனை தரம் உயர்த்த அன்னுார் மக்கள் எதிர்பார்ப்பு
அரசு மருத்துவமனை தரம் உயர்த்த அன்னுார் மக்கள் எதிர்பார்ப்பு
அரசு மருத்துவமனை தரம் உயர்த்த அன்னுார் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 09, 2025 11:31 PM
அன்னுார்; அன்னுார் தாலுகா மக்களின் பல ஆண்டு கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வரும் 14ம் தேதி பட்ஜெட்டில் வெளியாகுமா என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் வரும் 14ம் தேதி சமர்ப்பிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், அன்னூர் தாலுகா மக்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகுமா என எதிர்பார்த்து உள்ளனர்.
இதுகுறித்து அன்னூர் தாலுகா மக்கள் கூறியதாவது :
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் 30 சதவீத குளங்கள் மட்டுமே திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பெரும்பாலான குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன. அத்திக்கடவு இரண்டாம் திட்டத்தை உடனே துவக்கி நிறைவேற்ற வேண்டும். முதல் திட்டத்தில் இன்னும் நீர் செல்லாத குளம், குட்டைகளுக்கு தண்ணீர் செல்லும் படி செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனையில் 58 படுக்கைகள் மட்டுமே உள்ளன. போஸ்ட் மார்ட்டம் வசதியில்லை. பெரிய அறுவை சிகிச்சை கூடம் இல்லை. இந்த மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும்.
போக்குவரத்து நெரிசலை தீர்க்க, கிழக்கு மற்றும் மேற்கு புறவழிச் சாலையை நிறைவேற்ற வேண்டும்.
அன்னுாரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். தீயணைப்பு நிலையம் மற்றும் கோர்ட்டுக்கு சொந்த கட்டிடம் அமைக்க வேண்டும்.
அன்னுாரை தலைமையிடமாகக் கொண்டு மின் கோட்டம் அமைக்க வேண்டும். பாலிடெக்னிக் அல்லது கல்லூரி துவக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை தமிழக அரசு பட்ஜெட்டில் வெளியிட வேண்டும்.
இவ்வாறு, அன்னுார் மக்கள் தெரிவித்தனர்.