/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உங்கள் போலி நாடகத்தை இனியும் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் சமூக வலைத்தளத்தில் எம்.பி., - எம்.எல்.ஏ., காரசாரம்

ADDED : ஆக 06, 2024 12:22 AM
கோவை,:மதுரை மா.கம்யூ., எம்.பி., வெங்கடேசன், கோவை பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் இடையே சமூக வலைத்தளத்தில், ரயில்வே பட்ஜெட் பற்றி அனல் பறக்க விவாதிக்கப்படுவது பேசுபொருளாகியுள்ளது.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான தனது உரையை, எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார் எம்.பி., வெங்கடேசன். அதற்குப் பதிலளித்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், 'இன்னும் எத்தனை பொய்களைக் கட்டவிழ்த்து விடப் போகிறீர்கள் வெங்கடேசன்' என காட்டமாக விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கு, 'நான் பொய் சொல்லவில்லை; ரயில்வே அமைச்சர் உண்மையைச் சொல்லவில்லை' என, எம்.பி., வெங்கடேசன், விளக்கமாக பதிலளித்தார்.
உங்கள் செயலுக்கு பொய் என்ற சொல்தான் மிகப்பொருத்தமானது என, வானதி பதிலுக்குப் பதில் அளித்துள்ளார்.
வானதி தனது பதிலில் கூறியிருப்பதாவது:
2024-25ம் ஆண்டுக்கான 'பிங்க்' புத்தகம், இடைக்கால பட்ஜெட்டுக்குப் பின் பிப்., 2ல் வெளியிடப்பட்டுள்ளது. அதுவே, மத்திய பட்ஜெட்டிற்கும் பொருந்தும். 2024-25ல், 'கவச்' இயந்திரத்துக்கு ரூ.1,112.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
6 வந்தே பாரத், 77 அம்ரித் பாரத் நிலையங்கள், மணியாச்சி -- நாகர்கோவில் மற்றும் மதுரை- - மணியாச்சி- - தூத்துக்குடி வழித்தடங்கள் உட்பட, தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களின் பட்டியல் நீண்டிருக்கிறது.
மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சித்து விட்டது என்று நீங்கள் கூறுவது, முற்றிலும் கட்டுக்கதை. தமிழர்களுக்கான உரிமைக் குரல் என்ற பெயரில், நீங்கள் நடத்தும் போலி நாடகத்தை இனியும், தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு, அவர் தெரிவித்திருந்தார். இதற்கும் எம்.பி., வெங்கடேசன் பதிலளித்து இருந்தார்.
எம்.பி.,- எம்.எல்.ஏ., இடையேயான அரசியல் விவாதம், சமூக வலைத்தளத்தில் அனல் பறக்கிறது.