/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தள்ளு வண்டி கடைகளால் பஸ் ஸ்டாப்பில் மக்கள் தவிப்பு
/
தள்ளு வண்டி கடைகளால் பஸ் ஸ்டாப்பில் மக்கள் தவிப்பு
தள்ளு வண்டி கடைகளால் பஸ் ஸ்டாப்பில் மக்கள் தவிப்பு
தள்ளு வண்டி கடைகளால் பஸ் ஸ்டாப்பில் மக்கள் தவிப்பு
ADDED : ஜூன் 18, 2024 10:35 PM
அன்னுார்:கரியாம்பாளையம் பஸ் ஸ்டாப்பில், தள்ளுவண்டி கடைகளால் மக்கள் தவிக்கின்றனர்.
அன்னுார் - கோவை ரோட்டில், தேசிய நெடுஞ்சாலையில், கரியாம்பாளையம் நால் ரோட்டில், முக்கியமான பஸ் ஸ்டாப் உள்ளது.
கரியாம்பாளையம், மாசாண்டி பாளையம், கெம்ப நாயக்கன் பாளையம், பிள்ளையப்பம் பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் இங்கு வந்து பஸ் ஏறி, கோவை மற்றும் அன்னுார் செல்கின்றனர்.
இங்கு அதிக அளவில் போக்குவரத்து உள்ளநிலையில், கோவை நோக்கி செல்லும் பஸ்ஸிற்கு மக்கள் நிற்கும் பஸ் ஸ்டாப்பை ஒட்டி தள்ளுவண்டி கடைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அசைவம் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக உள்ளன. இதனால் பொதுமக்கள் அங்கு நின்று பஸ் ஏறுவதற்கும் அங்கு இறங்கி செல்வதற்கும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பெண்கள், முதியோர் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து கரியாம்பாளையம் ஊராட்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர், எனினும் நடவடிக்கை இல்லை.
'பொதுமக்களுக்கு இடையூறாக பஸ் ஸ்டாப்பில் உள்ள தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கரியாம்பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.