ADDED : செப் 03, 2024 01:47 AM
அன்னுார்:மோசமான சாலையால் அல்லிக்காரம்பாளையம் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அன்னுார், மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து, ஒரு கி.மீ., தொலைவில் அல்லிக்காரம்பாளையம் உள்ளது. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், ஆவின் பால் கொள்முதல் மையம், தனியார் மெட்ரிக் பள்ளி, சி.பி.எஸ்.இ., பள்ளி, தனியார் மருத்துவமனை ஆகியவை உள்ளன.
இந்தப் பாதையில் பல இடங்களில் தார் பெயர்ந்து, குழிகள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து விட்டன. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
'இதுகுறித்து ஒட்டர்பாளையம் ஊராட்சி மற்றும் அன்னுார் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், சாலை குழிகள் ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டு சமன்படுத்தப்படவில்லை.
பெரிய அளவில் விபத்து நடக்கும் முன்பு இந்த சாலையில் பராமரிப்பு பணி செய்ய வேண்டும்,' என்று அல்லிக்காரம்பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.