/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள் அவதி
/
ரோட்டில் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள் அவதி
ADDED : ஆக 21, 2024 11:45 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கோவில்பாளையம் பகுதியில் ரோட்டில் கழிவு நீர் வழிந்தோடுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, கோவில்பாளையம் - நெகமம் செல்லும் ரோட்டில், மக்கள் போக்குவரத்து அதிகமுள்ளது. இதில், கோவில்பாளையத்தில், ரோட்டோரத்தில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவுநீர், உறுஞ்சு குழியில் செல்லாமல் ரோட்டோரத்தில் தேங்கியும், வழிந்தோடுகிறது.
கழிவு நீர் தேங்கிய இடத்தில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. அருகில் உள்ள கடை மற்றும் குடியிருப்பு பகுதி மக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகின்றனர். பொது சுகாதாரம் பாதிப்பதால், மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, கழிவுநீர் தேங்கும் பிரச்னைக்கு ஊராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும்.
மக்கள் கூறியதாவது, 'இந்த ரோட்டில் கடந்த சில நாட்களாக, கழிவு நீர் வழிந்தோடுகிறது. குடியிருப்பு பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். கழிவு நீர் வழிந்தோடாமல் இருக்க, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உறுஞ்சு குழி அமைக்கப்பட்டது. ஆனால், இந்த உறிஞ்சு குழி வழியாக கழிவு நீர் செல்வதில்லை. மாறாக ரோட்டில் வழிந்தோடுகிறது,' என்றனர்.