/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிக்கடி ஏற்படும் பவர் கட் மக்கள் அவதி
/
அடிக்கடி ஏற்படும் பவர் கட் மக்கள் அவதி
ADDED : ஜூலை 13, 2024 08:44 AM
கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவில் அடிக்கடி 'பவர் கட்' ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் அதிகம் உள்ளன. இங்கு அடிக்கடி 'பவர் கட்' நிலவுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேல்நிலைதொட்டியில் இருந்து ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சாதாரண தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் வினியோக நேரத்தில் 'பவர் கட்' ஏற்படும் போது, வினியோகத்தில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும், நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 முறை 'பவர் கட்' ஆகிறது. இதனால் குடிசை தொழில் மற்றும் கடை வைத்திருப்பவர்கள் மிகவும் சிரமப்படுவதுடன், வியாபாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே, பேரூராட்சி பகுதியில் ஏற்படும் மின் தடையை சரி செய்ய மின்வாரியத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.