/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்துமீறும் தனியார் பஸ்கள் அவதிப்படும் மக்கள்
/
அத்துமீறும் தனியார் பஸ்கள் அவதிப்படும் மக்கள்
ADDED : மார் 22, 2024 01:19 AM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதியில் சில தனியார் பஸ்கள் நிற்காமல் பாலத்தில் செல்வதால் பயணியர்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்கள், கிணத்துக்கடவுக்கு சர்வீஸ் ரோடு வழியாக செல்கின்றன. அனைத்து பஸ்களும் கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட்டில் பயணியர்களை ஏற்றி, இறக்கி விட்டு செல்கின்றன.
கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள், காலை மற்றும் மாலை நேரத்தில் கோவை அல்லது பொள்ளாச்சி செல்ல அதிகளவு பயணியர் பஸ் ஸ்டாண்டுக்கு வருகின்றனர்.
ஆனால், மதிய நேரத்தில், பெரும்பாலும் தனியார் பஸ்கள் மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ரோட்டில் வருவதில்லை. மேம்பாலத்தின் மீது செல்வதால், பஸ் ஸ்டாண்டில் பயணியர் நீண்ட நேரம் பஸ்சிற்கு காத்திருக்கும் நிலை உள்ளது. அவசர நிலைக்கு கூட பஸ் கிடைப்பதில்லை.
மேலும், பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள், விதிமுறையை மீறி செல்வது தொடர்கதையாகி வருகிறது. இதை கண்டித்து பொதுமக்கள் பலர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், பயனில்லாமல் இருக்கிறது.
தனியார் பஸ்கள், சேவை நோக்கை மறந்து வருமானத்தை ஈட்டும் நோக்கிலேயே இருப்பதாக பயணியர் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், பயணியர்களிடம் சில்லரை கொடுக்காமல் இருப்பது, பயண சீட்டு வழங்காமல், மரியாதை குறைவாக பேசுகின்றனர். இதனால் பயணியர் கடுமையாக பாதிக்கின்றனர்.

