/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாழ்தள பஸ் சேவை ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
/
தாழ்தள பஸ் சேவை ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
தாழ்தள பஸ் சேவை ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
தாழ்தள பஸ் சேவை ஏற்படுத்த மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 06, 2024 09:08 PM
பொள்ளாச்சி ; பெருநகரங்களைப் போல, பொள்ளாச்சி நகரிலும், தாழ்தள பஸ்கள் இயக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழக மூன்று பணிமனைகளில் இருந்து, புறநகர் மற்றும் கிராமங்களுக்கு, 120க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்கள், பணி நிமித்தமாக அருகே உள்ள நகரங்களுக்குச் சென்று திரும்ப, பஸ் பயணத்தையே நம்பி உள்ளனர்.
இருப்பினும், காலை மற்றும் மாலை நேரங்களில், கூட்ட நெரிசல் ஏற்படும் போது, முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிய நேரத்திற்குள் பஸ்சிற்குள் ஏற முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், பெருநகரங்களைப் போல, பொள்ளாச்சியிலும் தாழ்தள பஸ்கள் இயக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது:
தாழ்தள பஸ்களில், இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ., குறைத்து, பயணியர் ஏறிய பின் பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தவழும் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்காக, 12 இருக்கைகள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில், இந்த பஸ்களின் சேவை படிப்படியாகக் கொண்டுவரப்படுகிறது. பொள்ளாச்சியில் இருந்து, கோவை மற்றும் திருப்பூருக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு, தாழ்தள பஸ் சேவையைக் கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.