/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் குறை தீர் கூட்டம் 420 மனு மீது நடவடிக்கை
/
மக்கள் குறை தீர் கூட்டம் 420 மனு மீது நடவடிக்கை
ADDED : ஆக 06, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் கிராந்திகுமார் மக்களிடம் மனுக்களை பெற்றார்.
இதில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுக்களை, மக்கள் சமர்ப்பித்தனர். அதில் இலவச வீடு வேண்டி 63, வீட்டுமனைப் பட்டாவுக்கு, 182, வேலைவாய்ப்புக்கு, 10, இதர மனுக்கள், 165 என மொத்தம் 420 மனுக்கள் வந்தன. அவற்றின் மீது, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.