ADDED : மே 06, 2026 03:32 PM
விஷ்ணுஸ்ரீ, பீளமேடு
திராவிட கட்சிகள் போன்று விஜய் அறிவித்துள்ள உதவித்தொகை, இலவசங்களுக்காக ஓட்டு போடவில்லை. அவர் நிச்சயம் நல்ல ஆட்சி தருவார் என்பதற்காகவே ஓட்டு போட்டோம். முதலில் எம்.எல்.ஏ.,க்களை சரியாக வழிநடத்த வேண்டும். ஊழலை வேருடன் அழிக்க முதல்வர் நேரடி பார்வையில் சிறப்பு குழு அமைப்பது, கல்வி கட்டணம், மருத்துவ கட்டண வரையறை, அரசு பள்ளிகள் மேம்பாடு, மதுக்கடைகளை படிப்படியாக மூடுவது போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும்.
அஸ்வின், கணபதி
தரமான கல்வி, மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் கடமையை செய்யாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும். இங்கு கடமையை செய்வதற்கே பணம் கொடுக்க வேண்டியுள்ளது. லஞ்சம் இல்லாத தமிழகமாக மாற புதிய சட்டங்களை, கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் ஓர் நடவடிக்கை எதிர்பார்க்கின்றேன்.
