ஆர்.டி.ஓ. காலி பணியிடங்களுக்கு நிரந்தர அதிகாரிகள் நியமிக்கலாமே
ஆர்.டி.ஓ. காலி பணியிடங்களுக்கு நிரந்தர அதிகாரிகள் நியமிக்கலாமே
ADDED : செப் 04, 2026 04:41 PM
கோவை: தமிழகத்தில் 28 இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்.டி.ஓ.) பணியிடங்கள் காலியாக உள்ளன.
கோவையில் ஆர்.டி.ஓ.(மத்தியம்) பணியிடம் காலியாக உள்ளது. பக்கத்து மாவட்ட அதிகாரிகள் கூடுதல் பொறுப்பாக கவனித்தனர். தலா 3 நாட்கள் வீதம் ஒவ்வொரு இடத்திலும் பணிபுரிந்ததால், கோப்புகள் தேங்கின. கீழ்நிலை அலுவலர்கள் அவற்றை கையாண்டனர்.
அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் கூடுதல் பொறுப்பு விடுவிக்கப்பட்டது. இப்போது, ஆர்.டி.ஓ. களின் நேர்முக உதவியாளர்களுக்கும், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கும் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
இது தற்காலிக ஏற்பாடாக இருந்தாலும், ஆர்.டி.ஓ. செய்ய வேண்டிய வேலைகள், அவர் பிறப்பிக்க வேண்டிய உத்தரவுகளை கூடுதல் பொறுப்பாக கீழ்நிலை அதிகாரிகளுக்கு கொடுப்பது தவறானது.
எனவே காலி பணியிடங்களில், நிரந்தரமாக தகுதியான அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
