தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடிப்படை வசதிகள் இல்லை  போலீஸ் குடியிருப்பில் அவஸ்தை 

அடிப்படை வசதிகள் இல்லை  போலீஸ் குடியிருப்பில் அவஸ்தை 

அடிப்படை வசதிகள் இல்லை  போலீஸ் குடியிருப்பில் அவஸ்தை 


ADDED : செப் 04, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: உப்பிலிபாளையம் போலீசார் குடியிருப்பில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி, போலீசாரின் குடும்பத்தினர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

குடிநீர், பிற பயன்பாடுகளுக்கான தண்ணீரும் போதுமான அளவில் கிடைப்பதில்லை என்று அவர்கள் புகார் தெரிவித்தனர்.

எப்போதாவது வரும் தண்ணீரும் கழிவுநீர் கலந்து வருவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கழிவுநீர் தொட்டிகள் நிரம்பி வழிவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் கூறினர்.

இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தினர்.

அதே போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் ஏசி., இன்ஸ்பெக்டர் வசிக்கும் கட்டடங்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது;  சாதாரண போலீசார் தங்கியுள்ள கட்டடங்களில்  வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை என்பதை ஆய்வில் அறிய முடிந்தது.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us