/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரிசி கடத்தலில் தப்பிய நபர் கைது
/
அரிசி கடத்தலில் தப்பிய நபர் கைது
ADDED : ஆக 13, 2024 01:31 AM
அன்னுார்;அரிசி கடத்தல் சம்பவத்தில், தப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.
அன்னுார் அருகே தீத்தாம்பாளையத்தில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக கோவை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் மற்றும் துணை தாசில்தார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். போலீசாரை கண்டதும் அங்கு இருந்த நபர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து அதிகாரிகள் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த 6,600 கிலோ ரேஷன் அரிசியையும், 2,500 கிலோ ரேஷன் அரிசி குருணையையும், கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனங்களையும், அரிசி அரைக்க பயன்படுத்திய இயந்திரத்தையும் கைப்பற்றினர்.
தேடுதல் வேட்டையில் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூவலிங்கம், 38. என்பவரை கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.