/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கடையால் தீ விபத்து அபாயம் அகற்ற பொதுமக்கள் போலீசில் மனு
/
மதுக்கடையால் தீ விபத்து அபாயம் அகற்ற பொதுமக்கள் போலீசில் மனு
மதுக்கடையால் தீ விபத்து அபாயம் அகற்ற பொதுமக்கள் போலீசில் மனு
மதுக்கடையால் தீ விபத்து அபாயம் அகற்ற பொதுமக்கள் போலீசில் மனு
ADDED : மே 13, 2024 01:00 AM
கோவை;கோவை லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:
லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடை பகுதியில் குடியிருப்புகள், கடைகள், ஆயில் விற்பனை கடைகள் உள்ளன. மது அருந்த வருபவர்கள் பீடி, சிகரெட்டை புகைத்து அப்படியே போட்டு செல்வதால், அதில் இருந்து நெருப்பு ஆயில் மீது பட்டு தீப்பற்றும் அபாயம் உள்ளது.
அத்துடன், மது அருந்த வருவோர் தகாத வார்த்தைகள் பேசி, அநாகரீகமாக நடந்து கொள்வதால், அந்த பகுதியில் உள்ள பெண்கள், பணிக்கு செல்ல முடியவில்லை.
பள்ளிகள், அரசு மருத்துவமனை அருகே உள்ளன. ஆகவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.