/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எப்., சந்தாதாரர் குறை தீர்ப்பு கூட்டம்
/
பி.எப்., சந்தாதாரர் குறை தீர்ப்பு கூட்டம்
ADDED : மார் 23, 2024 10:15 PM
கோவை : கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழகம் இணைந்து, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், வரும் 27ம் தேதி குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.
கோவையில், பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 'பிளாக் வளாகம் 5வது தளத்தில் உள்ள ஸ்டுடியோ ஹாலிலும், திருப்பூர் மாவட்டத்தில் முத்தனம்பாளையம் நல்லுார் லட்சுமி நகரில் உள்ள எம்.எஸ்.அப்பேரல் அரங்கிலும், கோத்தகிரியில் உள்ள பப்ளிக் பள்ளி அரங்கிலும் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் குறைகள் மற்றும் பிரச்னைகள் ஏதேனும் இருந்தால், காலை 10:30 முதல் 12:30 மணி வரை, நேரில் வந்து முறையிடலாம்.
உறுப்பினர், ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களின் யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் கொண்டு வருவது அவசியம்.
பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் -வைபவ் சிங் தெரிவித்துள்ளார்.

