ADDED : ஏப் 06, 2024 08:06 PM
அ நிறம் | அளவு
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில், உலக சுகாதார தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையத்தின் நிறுவனர் டாக்டர் ஆதித்யன் குகன் தலைமை வகித்தார்.
முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய அவர், இரண்டு குறைந்த விலையில் முழு உடல் பரிசோதனை திட்டத்தையும் அறிமுகம் செய்து வைத்தார்.
''இத்திட்டங்களின் ஒரு பகுதியாக, இலவச ஹோம் டெலிவரி வசதியுள்ள மருந்தகமான, 63 டிரக்மார்ட் பார்மசியிலிருந்து வாங்கப்படும் மருந்துகளுக்கு, 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மற்ற ஆய்வக சோதனைகள் மற்றும் இமேஜிங்கிற்கு, 50 சதவீதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது,'' என்றார் அவர். விவரங்களுக்கு, 96260 55556, enquires.agshealthcare@gmail.com.
