தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பில்லூர் அணை இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது

பில்லூர் அணை இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது

பில்லூர் அணை இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது


ADDED : ஜூலை 17, 2024 10:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2024 10:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்:பில்லூர் அணை இரண்டாவது நாளாக நிரம்பி வழிகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 20,000 கன அடி தண்ணீர் திறந்து விடுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி மாவட்ட எல்லையில், காரமடை வனப்பகுதியில், பில்லூர் மலைப்பகுதியில், 100 அடி உயரத்தில் பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இரு தினங்களுக்கு முன், கன மழை பெய்துள்ளது. இதனால் அதிகபட்சமாக வினாடிக்கு, 22,000 ஆயிரம் கன அடி தண்ணீர், அணைக்கு வந்துள்ளது. அணையின் நீர்மட்டம், 97 அடியை எட்டியதை அடுத்து, அணை நிரம்பியதாக அறிவிக்கப்பட்டது. அணைக்கு வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே வெளியேற்றி வருவதால், பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

நேற்று முன்தினம் இரவும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதில் அவலாஞ்சியில், 339 மில்லி மீட்டர், அப்பர் பவானியில்,217 மி.மீ., குந்தாவில், 108 மி.மீ., கெத்தையில், 8 மி.மீ., பரளியில், 2 மி.மீ., பில்லூரில், 1 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதனால் காலை, 10:00 மணிக்கு, அணைக்கு வினாடிக்கு, 21,030 கன அடி தண்ணீர் வந்ததை, அப்படியே ஆற்றில் திறந்து விட்டனர். மதியம் இரண்டு மணிக்கு, 16,140 கன அடியாக தண்ணீர் குறைந்தது.

இது குறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் கூறுகையில், பில்லூர் அணை நிரம்பியதை அடுத்து, பவானி ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோரம் தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us