/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமித்ஷாவை வரவேற்க வைத்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றம்; சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர்

ADDED : பிப் 26, 2025 04:10 AM

கோவை; நேற்று கோவை வந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்க, வைத்திருந்த பிளக்ஸ் போர்டுகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதால், பா.ஜ.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை, ஈஷா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கோவை வந்தார்.
அவரை வரவேற்பதற்காக, பா.ஜ.,வினர் கோவை விமான நிலையத்தில் இருந்து, அவிநாசி சாலையோரம் முழுவதும் வரிசையாக பிளக்ஸ் போர்டுகள் வைத்திருந்தனர்.
இந்நிலையில், பிளக்ஸ் போர்டுகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். பா.ஜ.,வினர் ஆத்திரமடைந்தனர். பிளக்ஸ் போர்டுகளை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர், பீளமேடு போலீஸ் நிலையம் முன், அவிநாசி சாலையில் அமர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், சுமார் 10 நிமிடத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து கலைந்தனர்.