/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோகோ வைக்கவும் கோடைக்கால பயிற்சி முகாம்
/
லோகோ வைக்கவும் கோடைக்கால பயிற்சி முகாம்
ADDED : ஏப் 18, 2024 05:02 AM
இக்ரா அகாடமி
ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், நீட், ஜீட் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள், வரும் 20ம் தேதி முதல் நடத்தப்படுகிறது. இடம்: இக்ரா (ஐ.க்யூ.ஆர்.ஏ.,) அகாடமி, கரும்புக்கடை.
தொடர்புக்கு: 96005 92177.
அங்கப்பா சிலம்பம்
அங்கப்பா சிலம்பம் கிளப் சார்பில், நஞ்சுண்டாபுரம் ரீவாம்ப் பிட்கிளப்பில் சிலம்பம் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. வரும் 22ம் தேதி முதல் 28ம் தேதி வரை காலை 7:30 முதல் 8:30 வரையிலும், மாலை, 5:30 முதல் 6:30 மணி வரையிலும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தொடர்புக்கு: 95850 61350.
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி
ஆறு வயதுக்கு மேற்பட்டோருக்கான, கோடைக்கால தடகளப்பயிற்சி முகாம், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நேரு ஸ்டேடியம், பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கல்வி குழுமம், கொடிசியா, நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது.
தொடர்புக்கு: 94871 17356.
சாய் டேக்வாண்டோ அகாடமி
குனியமுத்துார், வடவள்ளி ஆகிய இடங்களில் உள்ள சாய் டேக்வாண்டோ அகாடமியில் 6 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு டேக்வாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது.
தொடர்புக்கு: 95857 53373.

