/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஸ்லைவர் பிளான்ட் ஆலை திறக்க திட்டம்! காதி கிராம தொழில் ஆணைய தலைவர் பேச்சு
/
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஸ்லைவர் பிளான்ட் ஆலை திறக்க திட்டம்! காதி கிராம தொழில் ஆணைய தலைவர் பேச்சு
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஸ்லைவர் பிளான்ட் ஆலை திறக்க திட்டம்! காதி கிராம தொழில் ஆணைய தலைவர் பேச்சு
தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ஸ்லைவர் பிளான்ட் ஆலை திறக்க திட்டம்! காதி கிராம தொழில் ஆணைய தலைவர் பேச்சு
ADDED : செப் 02, 2024 02:05 AM

பொள்ளாச்சி;'தமிழகம், குஜராத், ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய, நான்கு புதிய ஸ்லைவர் பிளான்ட் ஆலைகளை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,'' என, பொள்ளாச்சியில் நடந்த காதி மற்றும் கிராம தொழில் ஆணைய தலைவர் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில் காதி சம்வாத் மற்றும் கிராமத் தொழில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கதர் கைவினைஞர்கள் பாராட்டு விழா நடந்தது.
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய இயக்குனர் சுரேஷ் வரவேற்றார். துணை முதன்மை செயல் அதிகாரி மதன்குமார் ரெட்டி, தமிழ்நாடு சர்வோதயா சங்க தலைவர் ராஜூ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
காதி மற்றும் கிராமத் தொழில் ஆணைய தலைவர் மனோஜ்குமார் பேசியதாவது:
முதல் முறையாக கதர் மற்றும் கிராம தொழில்களின் விற்பனை, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. கதர் தொழிலாளர்கள், நுாற்பாளர்கள், நெசவாளர்களின் அயராத உழைப்பே காரணம்.
கடந்த, 10 ஆண்டுகளில், பிரதமர் மோடியின் தலைமையில் காதி ஒரு சர்வதேச அடையாளமாக மாறியுள்ளது. காதி மற்றும் தொழில்களின் உற்பத்தி, 26,000 கோடியில் இருந்து, ஒரு லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
காதி மற்றும் கிராமத்தொழில்களின் விற்பனை, 31 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, ஒரு லட்சத்து, 55 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
கதர் ஆடை உற்பத்தி, 811 கோடி ரூபாயில் இருந்து, 3,206 கோடியாக அதிகரித்துள்ளது. காதி ஆடை விற்பனை, 1,081 கோடி ரூபாயில் இருந்து, 6,496 கோடியாக உயர்ந்துள்ளது.
கதர் வாயிலாக, ஐந்து லட்சம் கைவினைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அதில், 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள்.
தமிழகத்தில், 74 கதர் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதன் வாயிலாக, 2023 - 24ம் நிதியாண்டில் மொத்த காதி உற்பத்தி, 224.12 கோடியாக இருந்தது. இந்தாண்டு, 397.63 கோடிக்கு விற்பனை நடந்தது. தமிழகத்தில், 11,872 கைவினைஞர்கள் கதர் நிறுவனங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும், 48,000க்கும் மேற்பட்ட பணிமனைகள் கட்டப்பட்டுள்ளன. கேரளாவின் குட்டூரில் உள்ள சில்வர் பிளான்ட், கர்நாடகாவின் சித்ரதுர்கா ஸ்லைவர் பிளான்ட் புதுப்பிக்கப்பட்டன.
விரைவில், குஜராத், ஹரியானா, மஹாராஷ்டிரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நான்கு புதிய ஸ்லைவர் பிளான்ட் ஆலைகளை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கடந்த, 10 ஆண்டுகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சாரத்தால் இயங்கும் மண்பாண்டம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தேன்கூடு பெட்டிகள், தேனீ காலனி வினியோகிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநில அலுவலகம் வாயிலாக கடந்த இரண்டு பயிற்சிக்கு பின், 180 பனை வெல்ல தொழிலாளர்களுக்கு, வெல்லம் தயாரிக்க தேவையான 90 கருவி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுபோன்று, பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய வளமான தற்சார்பு கொண்ட வளர்ந்த இந்தியாவை உருவாக்க உறுதியுடன் முன்னேறிச் செல்வோம்.
இவ்வாறு, பேசினார்.