/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மோப்பிரிபாளையத்தில்3,200 மரக்கன்றுகள் நடும் பணி
/
மோப்பிரிபாளையத்தில்3,200 மரக்கன்றுகள் நடும் பணி
ADDED : செப் 02, 2024 01:53 AM

கருமத்தம்பட்டி;மோப்பிரிபாளையம் பேரூராட்சியில், பசுமை சாலை திட்டத்தின் கீழ், 3,200 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது.
கருமத்தம்பட்டி அடுத்த மோப்பிரிபாளையம் பேரூராட்சியில், 57 கி.மீ., சுற்றளவு உள்ள ரோடுகளின் ஓரங்களில், 3 ஆயிரத்து, 200 மரக்கன்றுகள் நடவு செய்து, பசுமை சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.
எல்.எம்.டபிள்யூ நிறுவனம், ஜி.கே.டி., தொண்டு நிறுவனம் சார்பில், மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது.
பேரூராட்சி தலைவர் சசிக்குமார், எல்.எம்.டபிள்யூ., சமூக பங்களிப்பு திட்ட பொறுப்பாளர் ராஜ்குமார், விஜய் புவனேஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் மோகன் ராஜ் ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்து திட்டத்தை துவக்கி வைத்தனர்.
கவுசிகா நதி மேம்பாட்டு சங்க தலைவர் செல்வராஜ், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஷ்யம், சுல்தான்பேட்டை விண்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.