/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மரக்கன்றுகள் நடவு
/
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மரக்கன்றுகள் நடவு
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மரக்கன்றுகள் நடவு
வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மரக்கன்றுகள் நடவு
ADDED : மே 04, 2024 12:25 AM

கோவை;கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், கோவை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் பசுமை சிறகுகள் அமைப்பு சார்பில், எலுமிச்சை, புங்கை, பாதம், வேப்பம், சவுக்கு உள்ளிட்ட, 50 மரக்கன்றுகள் நடப்பட்டன.
கோவை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், மகளிரணி செயலாளர் செல்வராணி, வீட்டு வசதி வாரிய உதவி செயற்பொறியாளர் சாரதா, வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சண்முகம், சமூக ஆர்வலர் உக்கடம் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், கெம்பட்டி காலனியிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.